எல்லா இடத்துலயும் பாகுபாடு.. எதுவும் சமமில்ல.. விளாசிய ஏஞ்செலினா ஜூலி

Keerthi
2 years ago
எல்லா இடத்துலயும் பாகுபாடு.. எதுவும் சமமில்ல.. விளாசிய ஏஞ்செலினா ஜூலி

பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்செலினா ஜுலியட் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். தங்கள் உரிமைகளுக்காக போராடும் இளவயதினருக்காக இந்தப் புத்தகத்தையும் எழுதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்செலசில், தான் எழுதிய'Know Your Rights and Claim Them: A Guide for Youth' எனும் புத்தகத்தை வெளியிட்டார் எஞ்செலினா ஜூலி. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்வு தொடர்பான பல்வேறு புகைப்படங்களைப் பகிர்ந்தார். மேலும் இளம் செயற்பாட்டாளர்கள் பற்றிய புத்தகம் இது என்றும் அதில் தெரிவித்தார்.

உலகம் முழுக்க மனித உரிமைகளுக்காக முன்களத்தில் நிற்கும் இளம் செயற்பாட்டாளர்களால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளர். 'சுற்றுச் சூழலை காப்பது முதல் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளை எதிர்த்து போராடுவது வரை பெரியவர்கள் செய்யத் தவறிய வேலைகளை செய்ய இளம் செயற்பாட்டாளர்கள் முன் வருகிறார்கள். உலகெங்கும் உள்ள அகதி முகாம்கள் மற்றும் மோதல் நிறைந்த பகுதிகளில் பெரியவர்களின் மோசமான முடிவுகளின் சுமையை குழந்தைகள் சுமக்கிறார்கள்' என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இந்த புத்தகத்தை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெரால்டைன் வான் புரேனுடன் இணைந்து எழுதியதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் இளவயதினர் தங்களை வெளிப்படுத்துவதற்கான ஏஜென்சிகள், அதிகாரம், அறிவு போன்றவை இருந்தால் அவர்களால் மற்ற இளவயதினர் மற்றும் பெரியவர்களின் வாழ்க்கையை மாற்றுவதோடு இன்னும் சமத்துவம் நிறைந்த உலகை உருவாக்க முடியும் என தெரிவித்தார். அதுதான் இந்த புதிய புத்தகம் சொல்லும் செய்தி என்றும் குறிப்பிட்டார்.

'ஒவ்வொரு இளைஞனுக்கும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், அமைதியான போராட்டங்களில் பங்கேற்கவும் உரிமை உண்டு. ஆனால் இவை மனித உரிமை என்றாலும், கண்டன ஊர்வலங்கள் நடைபெறும்போது அரசு சார்பில் வன்முறை பதிலாக வழங்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் ஒருவரின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வாறு கோருவது என்பது பற்றிய ஆலோசனைகளும்,உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய சில அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆகியவையும் உள்ளன' என ஏஞ்செலினா தெரிவித்துள்ளார்.