பெட்டில் படுத்துக்கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்தால் ரூ.25 லட்சம் சம்பளம்!
crafted beds என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் உயர் ரக படுக்கைகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த படுக்கைகளை அளிப்பதன் ஒரு அங்கமாக ‘படுக்கை ஆய்வாளர்’ என்ற பணியிடத்தை புதிதாக உருவாக்கியிருக்கிறது.
படுக்கை ஆய்வாளர் பணிக்கு தேர்வாகும் நபர் அந்நிறுவனத்தின் படுக்கையில் இருக்கும் சவுகரியம் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்த வேண்டும். வாரம் ஒரு புதிய படுக்கை அந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இவர் ஆண்டுதோறும் படுத்துக் கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதற்கான செலவை நிறுவனமே ஏற்கிறது. இது போக ஆண்டு வருமானமாக 25 லட்ச ரூபாய் தரப்படும். (£24,000)
இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர் வாரம் ஒன்றுக்கு 37.5 மணி நேரங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும். பின்னர் அந்த படுக்கையில் படுத்திருக்கும் போது ஏற்படும் சுகம் குறித்து நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இதனை நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டே செய்யலாம். 'netfilx and chill' என்ற புதிய திட்டத்தை இதற்காகவே அந்நிறுவனம் தயாரித்துள்ளது.
அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் மேலாளர் பிரையன் தில்லான் கூறுகையில், வாடிக்கையாளர் திருப்தியே எங்களின் மிகுந்த முன்னிரிமையாகும்.
எங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் ஏற்கனவே நல்ல ரிவ்யூக்களை பெற்று வருகிறோம். இது தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த படுக்கை ஆய்வாளர் பணி கூட வாடிக்கையாளர் திருப்திக்கான ஒரு அங்கம் தான்.
தற்போது எங்கள் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த நபர்களிடமிருந்து இந்த பணிக்கான விண்ணப்பங்களை கோருகிறது. எந்தவித இடையூரும் இன்றி அந்த நபர் எங்கள் படுக்கைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டுமென்பதற்காகவே இப்படி ஒரு திட்டம். மேலும் தேர்வாகும் நபர் வாரம் ஒரு முறை தனது அனுபவத்தை ரிவ்யூ செய்து நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.