6 ஆண்டுகள் ஆகிவிட்டது - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர். பின்பு இருவரும் காதலிப்பதாக கூறினார்கள். மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளிநாட்டுக்கு மட்டுமில்லாமல் கோயில்களுக்கும் அடிக்கடி செல்வார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘ நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ 6 ஆண்டுகள் ஆகியது போல் தெரியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.