வேறு வழியில் செல்ல எங்களைத் தள்ள வேண்டாம்: பேராயர்

#Investigation
Prathees
2 years ago
வேறு வழியில் செல்ல எங்களைத் தள்ள வேண்டாம்: பேராயர்

தானும் கத்தோலிக்க திருச்சபையும் வேறு பாதையில் நீதியைத் தேடுவதற்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தீவிரவாத தாக்குதல் பற்றிய உண்மையை வெளிப்படுத்துமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் அiசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (21) பிற்பகல் கடுவாப்பிட்டிய புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற  பூஜையில் பங்கேற்ற அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

30 மாதங்களுக்கு முன்பு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டுவாப்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் நீதி கோரி  பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பேராயர் மெல்கம் ரஞ்சித் தேவாலயத்திற்கு வந்தபோது, ​​அப்பகுதி மக்கள் நீதி கோரும் அட்டைகளைக் காட்டி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது, கர்தினாலிடம் அப்பகுதி மக்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டதுடன், அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இன்று நடைபெறும் விசாரணை அரசியல் சக்திகளின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படுகிறது.

எனவேஇ வெளிப்படையான மற்றும் நியாயமான நடவடிக்கை இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

நீதி கிடைக்கும் வரை நாங்கள் இந்த போராட்டத்தை கைவிட மாட்டோம்.

உண்மையை வெளிக்கொணர்வதில் எங்கள் சொந்த மக்கள் ஈடுபடக்கூடிய ஒரு பொறிமுறையின் மூலம் இந்த விசாரணைகளை நடத்த இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதியுக்கும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். வேறு வழியில் செல்ல எங்களைத் தள்ள வேண்டாம் என  இதன்போது தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!