தனி ஹெலிகாப்டரில் ஆன்மிக சுற்றுலா சென்ற சமந்தா..
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஜூன் மாதம் வெளியான ஃபேமிலி மேன் 2 சீரிஸிலிருந்து பாலிவுட்டிலும் சமந்தாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அக்டோபர் 3 ஆம் திகதி அறிவித்தனர்.
அதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமந்தாவை பற்றி வதந்திகள் பரவின. நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் , கருகலைத்ததாகவும் பலரும் கூற, நடிகை சமந்தா இவை அனைத்துமே பொய் என்றுக் கூறி இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
மேலும் சமந்தா தன்னைப் பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பியதாக சுமன் டிவி உள்ளிட்ட சில யூ-ட்யூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுப்பற்றி சமந்தா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இப்படி பல பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா தனது தோழியான ஷில்பா ரெட்டியுடன் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.
இருவரும் ஒன்றாக செல்வதை உறுதி செய்யும் வகையில் ஷில்பா ரெட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்
அந்த புகைப்படத்தில் தனி ஹெலிகாப்டர் முன் சமந்தா, ஷில்பா ரெட்டி நிற்கின்றனர். இருவரும் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆன்மிக சுற்றுலா முடிந்து வந்த பிறகு சமந்தா நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.