யோகிபாபுவால் தொடர்ந்து ஆஸ்கருக்கு சென்ற நயன்தாராவின் படம்!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் கூழாங்கல். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் வினோத் ராஜ் இயக்குகிறார்.
இந்தப் படம் இயக்குனரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு படக்குழு அனுப்பி வருகிறது. நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் பிரிவில் போட்டியிட்டு விருதை பெற்றுள்ளது.
மேலும் உக்ரைனில் நடந்த மோலோடிஸ்ட் திரைப்பட விழா, சீனாவில் நடந்த ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் படம் தேர்வானது.
தற்போது இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளது.
இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரும் கவுரவமாக கருதப்படுகிறது.