திடீரென நீக்கப்பட்ட தமன்னா… மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது வழக்கு!

Prabha Praneetha
4 years ago
திடீரென நீக்கப்பட்ட தமன்னா… மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது வழக்கு!

மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மேல் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக தமன்னாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளில் இந்த நிகழ்ச்சியை பிரபலமானதை அடுத்து தமிழில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் பிரம்மாண்டமான செட்களில் கைதேர்ந்த வல்லுநர்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்கினார்.

ஆனால் நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுசுயா தொகுத்து வழங்குகிறார்.

இதுகுறித்து பேசியுள்ள தமன்னாவின் வழக்கறிஞர் ‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியினர் இன்னும் சம்பள பாக்கியை கொடுக்கவில்லை.

தொழில்முறையாக அவர்கள் நடந்துகொள்ளாத போதும் நிகழ்ச்சியை முடித்துக் கொடுக்கவேண்டும் என தமன்னா விரும்பினார்.

ஆனால் அவர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தமன்னாவை நீக்கியுள்ளனர். இது சம்மந்தமாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மேல் வழக்கு தொடர உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4