‘தாதா சாகேப் பால்கே” விருதினை பெற்றார் ரஜினி காந்த்!
Prabha Praneetha
3 years ago
இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டுள்ளார்.
67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெற்றது.
இதன்போது திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நடிகர் ரஜனிகாந்திற்கு வழங்கி வைத்துள்ளார்.
இந்த விருதினை தனது குருவான கே.பாலசந்தருக்கு சமர்பிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதேவேளை நடிகர்களான தனுஷ், விஜய்சேதுபதி, பார்த்திபன், இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோரும் தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டனர்.