தனுஷ் படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி ஷெட்டி

Prabha Praneetha
3 years ago
தனுஷ் படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி ஷெட்டி

தனுஷ் நடிப்பில் இளன் இயக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின.

ஆனால் படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இப்போது இயக்குனர் இளன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்த படம் மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக உள்ளதாம்.

ஏற்கனவே தனுஷ் ஆடுகளம் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் மதுரைக் கதைகளத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உப்பேன்னா புகழ் கீர்த்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இப்போது மறுபடியும் சம்பளம் அதிகமாக தருவதாக சொல்லி படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!