நடிகை அசின் பிறந்த நாள் 26-10-2021
அசின் தொட்கல், இந்திய திரைத்துறையில் "அசின்" என்ற பெயரில் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் அறியப்படும் இவர், 2005 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் புகழ் பெற்ற திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள திரையில் நடிகையாக அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து ஒரு முன்னணி முக்கிய நடிகையாக புகழ் பெற்றவர். பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளார்.
பிறப்பு
அசின், கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஜோசப் தொட்கல், நேர்மையான ஒரு சிபிஐ அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பின்னர் வர்த்தக ரீதியாக பல வியாபாரங்களை செய்து ஒரு தொழிலதிபராக திகழ்பவர். இவரது தாய் ஒரு மருத்துவர் ஆவார்.
மேரி என்னும் பெயர் கொண்டுள்ள இவர் பின்னர் அசின் என இவரது பெற்றோர் பெயர் மாற்றியுள்ளனர். ஆங்கிலத்தில் A என்பது "without" மற்றும் சின் என்பது "பாவம்" என்ற பொருள் கொண்டது. "பாவங்கள் இல்லாத புனித ஆத்மா" , "தூய்மையானது" , "களங்கமில்லாதது" என்பதே இவரின் பெயருக்கான காரணம்.
கேரளா மாநிலத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை காற்றுள்ள இவர், பின்னர் திரைத்துறையில் ஆர்வம் கொண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
திரைப்பட தொடக்கம் / பிரபலம்
அசின் தனது பள்ளி படிப்பினை முடித்த பிறகு மால்லிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஃபி.பி.எல் (BPL) நிறுவனத்தின் தொலைபேசி விளம்பரத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் இயக்கத்தில் உருவான "நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா" என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து ஒரு நடிகையாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
அசின் நடித்துள்ள முதல் திரைப்படமானது கேரளாவில் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படமாகும். பின்னர் 2003-ஆம் ஆண்டு "அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இப்படமானது தமிழில் இயக்குனர் மோகன் இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படமாக வெளியாகி புகழ் பெற்ற "எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி" திரைப்படமாகும். இப்படத்திற்காக இவர் பிலிம்பர் விருதினை பெற்று பிரபலமானார்.
2004-ஆம் ஆண்டு "எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து 2005-ஆம் ஆண்டில் "உள்ளம் கேட்குமே", "கஜினி", "மஜா" என பல படங்களில் நடித்து தமிழில் ஒரு முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் அசின் நடித்துள்ள முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களான கஜினி (2005), வரலாறு (2006), "போக்கிரி" (2007), "வேல்" (2008), "தசாவதாரம்" (2008) ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் இவரை பிரபலமாக்கியது.
தமிழில் இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் ஹிந்தி திரையுலகில் நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியாகி புகழ் பெற்றது. நடிகை அசின் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படத்திலும் நாயகியாக நடித்து ஹிந்தியில் அறிமுகமாகியுள்ளார். இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை இப்படத்திக்காக பெற்றார்.