தேசிய விருது பெற்ற ஒவ்வொருவரையும் வாழ்த்திய பாரதிராஜா!
தேசிய விருது பெற்ற ஒவ்வொருவரையும் தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் வாழ்த்தியுள்ளார்.
அதேபோல் தாதா சாகிப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் அவர்களுக்கும் தனது வாழ்த்தினை பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விருது பெற்ற அனைவரும் தொடர்ந்து இதுபோன்று சிறந்த படைப்புகள் கொடுத்து தமிழ் திரை கலைத்துறையிலும் மேலும் பல சாதனைகள் புரியவும் இன்னும் பல உயரிய விருதுகள் வென்று புகழும் பெருமையும் பெற வேண்டும் என அன்போடு வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்
திரையுலகில் அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றும் சூப்பர் ஸ்டாராக நிகழும் பாசத்திற்குரிய நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இந்திய திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்
கூடவே தேசிய விருதுகளை வென்று எடுத்து நமக்கு பெருமை சேர்ந்த கலைப்புலி எஸ் தாணு, பார்த்திபன், தனுஷ், வெற்றிமாறன், விஜய்சேதுபதி, இமான், ரசூல் பூக்குட்டி, நாகவிஷால் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.