திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Keerthi
3 years ago
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர். இப்படத்தை சிவா இயக்கி உள்ளார். கிராமத்து கதையம்சத்தில் தயாராகி உள்ளது.

அண்ணாத்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில், அண்ணாத்த படத்தை மகள், மருமகன், பேரன்களுடன் ரஜினிகாந்து நேற்று பார்த்து ரசித்தார். பேரனோடு அண்ணாத்த படத்தை பார்த்ததாகவும், படத்தை பார்த்த தனது பேரன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து பரிசோதனை மேற்கொள்வார். ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக லதா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். அண்மையில் இவர் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!