20 ஆண்டுகளுக்கு பின் இணைகிறோம்.... அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

Keerthi
3 years ago
20 ஆண்டுகளுக்கு பின் இணைகிறோம்.... அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றுள் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்ததும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!