பிரபலத்தின் மறைவால் ‘சோ பேபி’ பாடல் வெளியீட்டை தள்ளிவைத்த சிவகார்த்திகேயன்
#TamilCinema
#Actor
Keerthi
3 years ago
மாரடைப்புக் காரணமாக பெங்களுருவில் உள்ள விக்ரம் தனியார் மத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடலின் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்தது.
சிவகார்த்திகேயன் எழுதிய இப்பாடலின் ஆடியோ ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இன்னும் வீடியோ பாடல் வெளியாகவில்லை. கடந்த வாரம் ‘செல்லம்மா’ பாடல் வெளியான நிலையில், இன்று வெளியிட அறிவித்தது படக்குழு. ஆனால், புனித் ராஜ்குமார் மறைவால் பாடல் வெளியீட்டை தள்ளிவைத்து அறிவித்திருக்கிறது படக்குழு.