தமன்னாவால் பலகோடி நஷ்டத்தை சந்தித்துள்ள சன் நெட்வொர்க்
தற்போது ரியாலிட்டி ஷோக்களை முன்னணி நட்சத்திரங்களே தொகுத்து வழங்குவது டிரெண்டாகி உள்ளது. அந்த வகையில் தமிழில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
அதேபோல பிரபல நடிகை தமன்னா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தெலுங்கு மொழியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய நட்சத்திரங்கள் சம்பளமாக பல கோடி ரூபாயை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா வெறும் 18 நாட்கள் கால்ஷீட்டுக்காக 2 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். அதில் 16 நாட்கள் வெற்றிகரமாக ஷூட்டிங்கும் முடித்துவிட்டாராம். ஆனால் மீதம் உள்ள இரண்டு நாட்களுக்கு ஷூட்டிங்கிற்கு வரவில்லையாம். மீதமுள்ள காட்சிகளை முடித்து தருமாறு தமன்னாவிடம் மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர் பலமுறை கேட்டும் தமன்னாவிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
தமன்னாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாஸ்டர் செஃப் குழுவினர், தமன்னாவுக்கு பதிலாக வேறு நடிகையை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் தமன்னாவுக்கு அந்த குழுவினர் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சத்தை சம்பளமாக வழங்கிவிட்டனர். மீதி இரண்டு நாட்கள் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு பாக்கியுள்ள தொகையை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியிருக்கின்றனர் மாஸ்டர் செஃப் குழுவினர்.
ஆனால் நடிகை தமன்னாவோ வேறு வேலைகளில் பிஸியாக இருந்திருக்கிறார். அதனால் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் பாக்கி காட்சிகளை முடித்து தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் மாஸ்டர் செஃப் குழுவினருக்கு 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதற்குமே ஒத்துவராத தமன்னா, வேறு நடிகையை களமிறக்க போகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும் மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர்கள் மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமன்னாவின் இந்த செயலால் கொதித்தெழுந்த மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேர்மை தவறாமல் தமன்னாவுக்கு சேரவேண்டிய சம்பளத்தை சரியாக வழங்கி இருக்கிறோம் என்றும் எங்களிடம் கமிட்டாகி உள்ள இதர வேலைகளை முடித்து தராமல் இழுத்தடிப்பது தமன்னா செய்த குற்றம் என்றும் எங்களின் நேர்மையை அவமானப்படுத்தி தமன்னா இவ்வாறு வழக்கு தொடுத்தது தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர்கள் கூறி உள்ளனர்.