நடிகர் சாருக்கான் பிறந்த நாள் 02-11-2021
#Cinema
#Actor
Mugunthan Mugunthan
3 years ago
சாருக் கான் (Sharukh Khan; பிறப்பு- நவம்பர் 2, 1965) பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 26 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு கைதராபாத்தில் அமைந்துள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் கவுரவ மருத்துவ பட்டம் வழங்கியது.
தமிழ் திரைப்படங்கள்
- ஹே ராம்
- சாம்ராட் அசோகா
- தேசம்
தயாரிப்பாளர்
- ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானி (2000)
- அசோகா (2001)
- சல்தே சல்தே (2003)
- மே ஹூன் நா (2004)
- கால்l (2005)
- பஹேலி (2005)
- ஓம் சாந்தி ஓம் (2007)
- ரப்னே பனாதி ஜோடி (2008)
- ரா ஒன் (2012)
- சென்னை எக்ஸ்பிரஸ் (2013)