பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் - நடந்தது என்ன?

Keerthi
3 years ago
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் - நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவர், தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார்.
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருக்கும் போதிலும், தமிழில் தொடர்ச்சியாக குணச்சித்திர கதாப் பாத்திரங்களிலும் நடித்துவருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். எனவே, ஆண்டு முழுவதும் விஜய் சேதுபதி மிகவும் பிஸியாக இருந்துவருகிறார்.

இந்தநிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் மீது ஓடிவந்து ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர், விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்றவரை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்த பெங்களூரு காவல்துறையினர், 'விஜய் சேதுபதி உதவியாளர் காவல் நிலையத்துக்கு வந்து இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை. தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார். அதேபோல, விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபரும் எழுதிக் கொடுத்துள்ளார்' என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், 'விமான நிலையத்திலிருந்து விஜய் சேதுபதி வருவதற்காக அவரின் உதவியாளர் பாதையிலிருந்தவர்களை அகற்றியுள்ளார். அப்போது, பயணி ஒருவரை விஜய் சேதுபதியின் உதவியாளர் பிடித்து தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்காரணமாக, பயணி விஜய் சேதுபதியின் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தலையிட்டு அந்தச் சண்டையை தடுத்து நிறுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!