விஜய்க்கு எழுதப்பட்ட கதையில் தனுஷ் நடித்து வெற்றியடைந்த படம் எது?

#TamilCinema #Actor
Prasu
3 years ago
விஜய்க்கு எழுதப்பட்ட கதையில் தனுஷ் நடித்து வெற்றியடைந்த படம் எது?

கே.வி ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு நல்ல ஒளிப்பதிவாளர், இயக்குனர். 

தமிழ், மலையாளம், ஹிந்தி என 3 மொழிகளின் படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். படம் இயக்குவதில் ஆர்வம் கொண்ட அவர் நல்ல படங்களை இயக்கி வந்தார், அதில் எல்லாமே ஹிட் என்று கூறலாம்.

அயன், கோ, மாற்றான், அனேகன் படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது, இனியும் நல்ல படங்கள் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கே.வி. ஆனந்த் தனது சினிமா பயணத்தில் விஜய்யை இயக்க ஆசைப்பட்டு அவரை மனதில் வைத்து ஒரு கதை எழுதியுள்ளார், அந்த படம் தான் தனுஷ் நடித்த அனேகன்.

அந்த நேரத்தில் வேறொரு படங்களின் வேலையில் பிஸியாக இருந்ததால் விஜய்யால் அப்போது அனேகன் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள முடியவில்லையாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!