ஆரோக்கியமாக வாழ குஷ்பு அறிவுரை?
தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்த குஷ்பு இப்போது அரசியல் பக்கம் திரும்பி உள்ளார். அதோடு சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு குஷ்பு நடித்துள்ள அண்ணாத்த படம் இன்று திரைக்கு வருகிறது. கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து இளமை தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களில் 90-களில் வந்த குஷ்புவைபோல் அவர் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.
இந்த நிலையில் ஆரோக்கியமாக வாழ குஷ்பு சில அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மழையோ, ஆலங்கட்டி மழையோ அல்லது எதுவாக இருந்தாலும். உங்கள் உடற்பயிற்சியை தவிர்ப்பதற்கான காரணங்களை தேட வேண்டாம். சரிவிகிதமான உணவை உண்ணுங்கள். உங்கள் வரம்புக்கு மீறாமல் உடற்பயிற்சியை செய்யுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள். உங்களுக்கு அழகான வணக்கத்தை சொல்லுங்கள்." என்று கூறியுள்ளார்.