5 மொழிகளில் தயாராகும் டைகர் நாகேஸ்வரராவ்

#TamilCinema #Film
5 மொழிகளில் தயாராகும் டைகர் நாகேஸ்வரராவ்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1970ம் ஆண்டு வாழ்ந்த பிரபல கொள்ளையன் டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை அதே பெயரில் சினிமாவாகிறது. சென்னை புழல் சிறை உள்பட அவர் அடைத்து வைக்கப்பட்ட அத்தனை சிறைகளில் இருந்தும் அவர் தப்பித்திருக்கிறார். ஒவ்வொரு சிறையில் இருந்தும் அவர் எப்படி தப்பித்தார் என்பதை ஆந்திர போலீஸ் பயிற்சி மையத்தில் பாடமாக வைத்துள்ளனர். இறுதியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கதைதான் இப்போது படமாகிறது. டைகர் நாகேஸ்வரராவாக ரவி தேஜா நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவி தேஜா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி வருகிறார். இப்படத்தில் அவரது உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றம் முன்னெப்போதிலும் இல்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.

இது ரவி தேஜாவின் முதல் அகில இந்திய படமாகும். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இது உருவாகிறது. ஆர் மதி ஒளிப்பதிவை கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!