கமல்ஹாசனின் விக்ரம் சிறப்பு போஸ்டர்!

Prabha Praneetha
3 years ago
கமல்ஹாசனின் விக்ரம் சிறப்பு போஸ்டர்!

கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில் புதிய அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

அதில், விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த தகவல் கமல்ஹாசனின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!