பீஸ்ட் வெளிநாட்டு படப்பிடிப்பிற்கு செல்லும் விஜய்!
#TamilCinema
Mugunthan Mugunthan
3 years ago
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் தான் பீஸ்ட்.
பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான டாக்டர் மாபெரும் வெற்றியடைந்து 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.
இந்நிலையில் சென்னை, டில்லி என முக்கிய இடங்களில் நடந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும் 75% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ஜார்ஜியா செலவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சண்டை காட்சி உள்ளிட்ட முக்கியமான காட்சிகளை படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.