இன்றைய வேத வசனம் 10.11.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 10.11.2021

தேவனுடைய ஒவ்வொரு படைப்புகளும், ஆச்சரியமும் அழரும் நிறைந்தவை. அப்படி பார்க்க போனால் ஒவ்வொரு உயிரினங்களும் பல தனித்துவம் வாய்ந்தது.

அந்த வகை உயிரினங்களில் ஆஸ்திரியாவில் வாழும் ERMINE என்ற விலங்கு பனி பிரதேசங்களில் காணப்படும். அதற்கு ஒரு தனித்துவம் உண்டு.

அது சின்ன விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடும். அதனுடைய மேல் தோல் வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனுடைய தோலை சில காலம் ஐரோப்பியர்கள் ராஜாக்களின் உடைகளில் பயன்படுத் தினார்கள்.

அதை எளிதில் பிடித்துவிட முடியாது. ஆனால் ERMINE யை பிடிக்க வேட்டைக்காரர்கள் அதினுடைய பதுங்கு குழியின் வாசலில் அசுத்தத்தைப் போட்டு விடுவார்கள்.

பின்னர் வெடி போட்டு சத்தத்தை எழுப்புவார்கள் . அது பயந்துக் கொண்டு பதுங்கு குழியை நோக்கி ஓடிவரும். அப்பொழுது அந்த அசுத்தத்தை பார்த்தவுடன் ERMINE உள்ளே நுழையாமல் தன்னுடைய இரண்டு கால்களையும் தூக்கிக் கொண்டு நின்று விடும். 

அப்பொழுது அதை வேட்டையாடி, அதினுடைய தோலை எடுத்து பயன்படுத்துவார்கள்.
ஒரு சாதாரண உயிரினம் ஆனாலும் அது தன்னை கறைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளவும் நுணிகிறது.

நண்பர்களே! இன்றைக்கு உங்களுடைய ஆவிக்குரிய வாழ்வில் உங்களை கீழே விழத்தள்ளுவதற்கு சாத்தான் உங்கள் பாதையிலும், நீங்கள் செல்லும் வழியிலும் அசுத்தத்தை எறியும் போது உங்களுடைய தீர்மானம் என்ன?

அசுத்தத்திற்கு விலகி ஓடுவதா? அல்லது அந்த அசுத்தம் என்னை ஒன்றும் செய்யாது என்று சொல்லி சிம்சோனைப் போல அதை தொடுவதும், பின் ருசிப்பதும் என்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா?

சிம்சோன் தன் மீது உள்ள அபிஷேகத்தையும், அழைப்பையும், தேவன் தந்த பொறுப்பையும் மறந்து போனதினால், கொஞ்சம் கொஞ்சமாக சாத்தான் ஒரு பெரிய பராக்கிரமசாலியான சிம்சோனை பரிசுத்த குலைச்சலாக்கி, அவன் முடியை சிரைத்து, கண்களைப் பிடுங்கி, அவனை சிறைப்பிடித்து, சீரழித்து, மாவரைக்க வைத்து விட்டான்.

நண்பர்களே! உங்கள் பலம் உங்கள் பரிசுத்தம். பரிசுத்தமுள்ள தேவன் உங்களிடத்தில் எதிர்பார்ப்பது பரிசுத்தம்.

பரிசுத்தம் உங்கள் அடையாளமாக இருக்கட்டும். பரிசுத்த பாத்திரமாக உங்களை அவர் கையில் எடுத்து பயன்படுத்த உங்கள் பரிசுத்தம் அவசியம்.

பரிசுத்ததிற்கான தாகம் உங்களிடத்தில் உண்டானால் உங்களை பரிசுத்தப்படுத்தி பயன்படுத்த பரிசுத்த தேவன் உண்டு.

கர்த்தர் கரத்தில் பரிசுத்த பாத்திரமாய் மாற, உங்களை பரிசுத்தத்திற்கு அர்ப்பணியுங்கள். அப்பொழுது எழுப்புதல் நாட்களில் உங்கள் பங்கு பெரியதாயிருக்கும். ஆமென்!

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தல் 22:11,12)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!