மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்

#Basil Rajapaksa #Parliament
Prathees
2 years ago
மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வரவு செலவுத் திட்ட அறிக்கையை இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிப்பார் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இது நாட்டின் 76வது வரவு செலவுத் திட்டம் என்பதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட அறிக்கையாகும்.

இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஒக்டோபர் 07ஆம் திகதி நிதியமைச்சரால் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படிஇ வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை (13) முதல் 22 ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது

வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் நிதி அமைச்சரினால் ஏற்பாடு செய்யப்படும் சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரம் இடம்பெறும். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் மாத்திரம் இதில் கலந்துகொள்வர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!