அரசாங்க பணியாளர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள் - அரசு அறிவிப்பு

Nila
2 years ago
அரசாங்க பணியாளர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள் - அரசு அறிவிப்பு

அரசாங்க பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர், பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அவர் தனது உரையில்...

2014 இல் கள உத்தியோகத்தர்களினால் வழங்கப்படுகின்ற அரசாங்க சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றினை நாம் ஆரம்பித்தோம்.

இம் முன்னெடுப்பின் கீழ் 146,381 கள அலுவலர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டதுடன் அவர்கள் தமது அரசாங்க சேவையினை வழங்குவதற்கு குறித்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை இன்று நான் காணும் போது மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தினை மீண்டும்அறிமுகப்படுத்துவதற்கு நான்திட்டமிட்டுள்ளதுடன் அதன் நன்மைகளை அரசாங்க ஊழியர்களுக்கு மாற்றுகின்ற முறைமையொன்றினையும் செயற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளேன்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!