வெள்ளத்தில் உயிரிழந்த ஒன்றரை லட்சம் கோழிகளை விற்பனை செய்ய ஆயத்தம்! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

#Police
Prathees
2 years ago
வெள்ளத்தில் உயிரிழந்த ஒன்றரை லட்சம் கோழிகளை விற்பனை செய்ய ஆயத்தம்! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

மாஓயா வெள்ளத்தில் மூழ்கியதாகக் கூறப்படும் கோழிப் பண்ணையில் இறந்த 150,000 கோழிகள் நுகர்வுக்குத் தகுதியற்றவையாக இருந்ததால் கடந்த 10ஆம் திகதி பிற்பகல் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் புதைக்கப்பட்டன.

மீரிகம பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணையில் சுமார் 150,000 கோழிகள் மாஓயா நிரம்பியதால் உயிரிழந்துள்ளன.

நீர் மட்டம் குறைந்த பிறகு  இறந்த கோழிகள் விற்பனைக்காக லொறிகளில் ஏற்றப்படுவதாக  மீரிகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மீரிகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மீரிகம பொலிஸாரினால் கோழிப்பண்ணை சோதனைக்குட்படுத்தப்பட்டது.

பொது சுகாதார பரிசோதகர்கள் அங்கு சென்ற போதும் இறந்த கோழிகளை லொறிகளில் ஏற்றப்படுவதை கண்டுள்ளனர்.

விலங்குகளுக்கு போடுவதற்காகக லொறிகளில் ஏற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பண்ணை அமைந்துள்ள நிலம் நீரால் நிரப்பப்படுவதால் குழிகளை தோண்ட முடியாது என அதன் நிர்வாகம் அதிகாரிகளுக்கு தெரிவித்ததையடுத்து,  இறந்த கோழிகளை பண்ணைக்கு அருகில் உள்ள நிலத்தில் புதைக்க நிலத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டது.

இட ஆய்வுக்கு பின், அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டு,  அதிகாரிகள் மேற்பார்வையில் கோழிகள் அடக்கம் செய்யப்பட்டன

இந்த கோழிகள் சந்தைக்கு விடப்பட்டிருந்தால் வெள்ள அபாயத்தைவிட பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!