மீண்டும் முடக்கப்படுமா நாடு? மக்கள் கைகளிலேயே முடிவு - சுகாதார அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

Reha
2 years ago
மீண்டும் முடக்கப்படுமா நாடு? மக்கள் கைகளிலேயே முடிவு - சுகாதார அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்தும் முடிந்தவரை முன்னெடுப்போம் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசு மிக உயர்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது மக்கள் தங்களின் உயரிய பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் வழங்குகின்ற பங்களிப்புக்கமைய கொரோனாத் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும்.

கொரோனா கட்டுப்பாட்டுக்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் அல்லது நாடு முடக்கம் குறித்து தீர்மானிக்கப்படும்.

மக்கள் அதற்கு எதிர்மறையாக நடந்துகொண்டால், மீண்டும் பயணக் கட்டுப்பாடு அல்லது நாட்டை முடக்குதல் போன்றதொரு சூழலை எதிர்கொள்ள நேரிடலாம்.

அத்துடன், இதுவரை வெற்றிகரமாக தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டும்" - என்றார்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!