இலங்கையில் மற்றுமொரு கொரோனாக் கொத்தணி! - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Reha
2 years ago
இலங்கையில் மற்றுமொரு கொரோனாக் கொத்தணி! - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டதன் காரணமாக மிக விரைவில் மேலுமொரு கொரோனா அலை உருவாகுவதற்கான அபாய நிலை உருவாகியுள்ளது என இலங்கை வைத்தியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய கடிதம் அந்தச் சங்கத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் தற்போதைய சட்டம் மற்றும் வரையறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

அதன்போது சுகாதார நடைமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை முழுமையாகக் கண்காணித்தல் மற்றும் சான்றுப்படுத்தல் கட்டாயமானது என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று முக்கிய தரப்பினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைச் செலுத்துவது அவசியம் என்றும், கொரானாத் தொற்று பரவலடையும் எச்சரிக்கை தன்மையை தற்போதைய நிலையில் கவனத்தில்கொள்ள வேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மறுவாழ்வாக்கப்பட வேண்டிய 60 வயதுக்குக் குறைவான நோயாளர்கள் மற்றும் சகல சுகாதார சேவையாளர்களுக்கும் மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டடங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், மரணச் சடங்குகள், இசை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ஆகிய நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை வரையறுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!