நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு

Reha
2 years ago
நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு

சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக டிசம்பர் மாதத்திற்குள் மரக்கறிகளுக்கு நாடாளவிய ரீதியில் பாரிய தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பேலியகொடயில் உள்ள மெனிங் சந்தைக்கு தினசரி வழங்கப்படும் மரக்கறிகளின் அளவுடன் ஒப்பிடும் போது தற்போது 60 சதவீதம் குறைந்துள்ளதாக மெனிங் மற்றும் அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் சுமார் 200,000 கிலோ கிராம் மரக்கறிகள் கிடைத்து வந்த நிலையில் தற்போது 100,000 கிலோ கிராமிற்கும் குறைவாகவே கிடைக்கின்றது. இது 50 சதவீத வீழ்ச்சி என நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் ஆர்.எஸ்.பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்திற்கான மரக்கறி விநியோகம் 80 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்தப் பகுதி பொருளாதார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி சமந்த சூரியகொட தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கான மரக்கறி விநியோகமும் சுமார் 75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வழமையாக ஆண்டு இறுதியில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பொருளாதார நிலையங்களுக்கு காய்கறி இறக்குமதிகள் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலை நீடித்தால் நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார நிலையங்களின் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!