முன்னாள் ஆளுநரின் வர்த்தமானியை  ரத்து செய்த புதிய ஆளுநர்

#NorthernProvince
Prathees
2 years ago
முன்னாள் ஆளுநரின் வர்த்தமானியை  ரத்து செய்த புதிய ஆளுநர்

மன்னார் பிரதேச சபையின் தலைவரை பதவியில் இருந்து நீக்கி வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கு வடமாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சவுல் ஹமீட் மொஹமட் முஜாஹிர் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரி கந்தையா அரியநாயகம் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் வடமாகாண ஆளுநர் அண்மையில்  ரதேச சபையின்தலைவரை, தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அன்றைய வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தீர்மானத்தை அறிவித்து செப்டெம்பர் 13ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

எனினும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து சவுல் ஹமீட் மொஹமட் முஜாஹிரை நீக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தற்போதைய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!