அரச உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

#Gotabaya Rajapaksa #Basil Rajapaksa
Prathees
2 years ago
அரச உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

முழு அரச சேவைக்கும் ஏற்ற வகையில் சம்பளம் அல்லது கொடுப்பனவுகளில் குறைந்தபட்சம் ரூ.18,000 அதிகரிப்பு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படாவிட்டால், முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருக்கு நேற்று (13) இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

பொருட்களின் விலையை அதிகரிப்பானது  ஆரம்ப வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது பெறப்பட்ட ஊதியங்கள் திருப்திகரமாக இல்லை.

பொதுத்துறை மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி செலவு மாதம் ரூ.58,000 என்று கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் மாதம் ஒருமுறை சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து தமது சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என பலமாக எதிர்பார்க்கப்பட்டது.

முழு அரச சேவைக்கும் ஏற்ற வகையில் குறைந்தபட்ச சம்பளம் அல்லது கொடுப்பனவு அதிகரிப்பு ரூபா 18,000 என எதிர்பார்க்கிறது, இல்லையேல் எதிர்காலத்தில் முழு அரச சேவையும் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கான அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு வழங்காவிடின் முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடபடபட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!