நடிகை நயன்தாரா பிறந்தநாள் 18-11-2021
நயன்தாரா, கேரளா மாநிலத்தில் பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்னும் புனைப்பெயரினை கொண்டுள்ளார்.
பிறப்பு / திரையுலக அறிமுகம்
நயன்தாரா, கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்துள்ள இவர், பிறப்பால் மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் பிறந்திருந்தாலும் இவரது தந்தை இந்திய விமான படையில் பணியாற்றியதால் இவர், இவரின் பள்ளி படிப்பினை ஜாம்நகர், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் பயின்றுள்ளார். பின்னர் கேரளாவில் உள்ள மார்தோமா கல்லூரியில் தனது இளங்கலை படத்தினை வென்றுள்ளார்.
இவருக்கு லெனோ எனும் தமயன் உள்ளார், இவர் துபாயில் வாழ்ந்து வருகிறார். இவர் கல்லூரி பருவத்தில் மாடலிங் துறையில் அவ்வப்போது பொழுதுபோக்கிற்காக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் பணியாற்றிய மாடலிங் துறையின் மூலம் இவருக்கு பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சத்யன் அந்திக்கப்-ன் அறிமுகம் கிடைத்து "மனஸ்ஸினைக்கற" திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
பிரபலம்
மலையாள திரையுலகில் நாயகியை அறிமுகமான இவர், இப்படத்தினை தொடர்ந்து தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து புகழ் பெற்ற ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் நடித்து தமிழில் சிறந்த அறிமுக நடிகையென பலரால் கௌரவிற்கப்பட்டார்.
இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையில் பிரபலமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுடன் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.