நாடு மீண்டும் முடக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சியே ஏற்க வேண்டும்! - சரத் வீரசேகர

Reha
2 years ago
நாடு மீண்டும் முடக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சியே ஏற்க வேண்டும்! - சரத் வீரசேகர

நாட்டில் மீண்டுமொரு கொவிட் அலை ஏற்பட்டு நாடு முடக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பை எதிர்க்கட்சியே ஏற்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொரோனா அபாயத்தை கவனத்திற் கொள்ளாது எதிரணியின் செயற்பாடு முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்.

எதிர்க்கட்சியினர் நாட்டில் மிகவும் தோல்வியடைந்த ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். வெளிநாடுகளில் ஏனைய கட்சிகளும் ஒன்றிணைந்து வைரஸில் இருந்து தமது நாடுகளை மீட்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் இங்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துடன் இணைந்து வைரஸை ஒழிக்க ஒத்துழைப்பதை விடுத்து வைரஸை பரப்பி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர்.

தொற்று நிலைமையில் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுக்கமைய பொலிஸார் செயற்படுகின்றனர். இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை எதிர்காலத்திலும் நடத்தி இன்னுமொரு அலை ஏற்பட்டு நாடு முடக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சி ஏற்க வேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!