விஜய் 66 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்க போட்டி போடும் பெரிய நிறுவனங்கள் (லங்கா4.கொம் / Lanka4.com)

Reha
2 years ago
விஜய் 66 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்க போட்டி போடும் பெரிய நிறுவனங்கள் (லங்கா4.கொம் / Lanka4.com)

கொரோனா நோய் தொற்று ஆரம்பித்ததில் இருந்து திரையரங்குகளில் படங்கள் ஒளிபரப்புவதை அரசு திருத்தி வைத்திருந்தது. கொரோனா தொற்று குறைய திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்ய அனுமதித்தது அரசு.

அப்படி முதல் படமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது விஜய்யின் மாஸ்டர், வழக்கமான கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதையே கொண்டாடினார்கள்.

அப்படத்தை தொடர்ந்து விஜய், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற கதையில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு எந்தவித சத்தமும் இல்லாமல் நடந்து வருகிறது. படப்பிடிப்பை முடித்த பிரபலங்கள் மட்டும் அவ்வப்போது பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில் படம் நடிக்க தில் ராஜு தயாரிக்க இருக்கிறார். மற்றபடி படம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இன்னும் பட அறிவிப்பு கூட வேறு எதுவும் வரவிவ்லை, படப்பிடிப்பு தொடங்வில்லை அதற்குள் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்க பெரிய நிறுவனங்கள் போட்டிபோட்டு பெரிய தொகை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்களாம். அந்த லிஸ்டில் படத்தை வாங்க முதலில் இருப்பது ஜீ நிறுவனம் என கூறப்படுகிறது.