சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு! (லங்கா4.கொம் / Lanka4.com)

Prabha Praneetha
3 years ago
சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு! (லங்கா4.கொம் / Lanka4.com)

1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ஜெய் பீம். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்த இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 2 ஆம் திகதி வெளியான இந்தப் படம் இந்திய அளவில் திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தப் படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்தவரின் வீட்டில் குறிப்பிட்ட சாதியின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து அந்த சின்னம் படத்தில் இருந்து அகற்றப்பட்டது. இருப்பினும் பிரச்னை தொடர்ந்துகொண்டே இருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், ஜெய் பீம் பட தரப்பை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

அதற்கு பதிலளித்த, எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் எண்ணம் தனக்கில்லை என்று விளக்கமளித்திருந்தார்.

மேலும் இந்தப் பட இயக்குநர் ஞானவேல், ஜெய் பீம் படத்தால் மன வருத்தம் அடந்தவர்களுக்கு என உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நடிகர் சூர்யா ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!