இன்றைய வேத வசனம் 02.12.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 02.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோசெயர் 3:3,4)

ஒரு கோழியானது, முட்டைகளின் மேல் அடை காத்து, அம்முட்டைகளை பொரிக்க தருவாயில், உள்ளிருக்கும் குஞ்சுகளைப் பார்த்து,

என் அருமை பிள்ளைகளே, நீங்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியே வந்து உலகையும், சூரியன், சந்திரன் இவைகளின்ளின் மகிமையையும், உங்கள் தாயாகிய எண்ணையும் காண்பீர்கள். என்றதாம்.
அதற்கு குஞ்சுகள், "தாயே அதை நாங்கள் எப்படி நம்புவது? இந்த ஓட்டுக்குள் இருக்கும் இருள்தான் எங்கும் இருக்கும்" என்று சொன்னதாம்.

ஆனால் சற்று நேரத்தில், முட்டைகள் பிளந்து, குஞ்சுகள் வெளிப்பட்டபோது உலகத்தின் மகிமையைக் கண்டு பரவசமடைந்ததாம்.

இப்பொழுதும் உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. ஒருநாள் இந்த சரீரத்தை விட்டு விட்டு, நீங்கள் மகிமையும் ராஜ்யத்திலே குடியேறப் போகிறீர்கள்.

தாய்ப் பறவையின் வெப்பம், முட்டைக்குள் இருக்கும் வெள்ளைக்கரு, மஞ்சள் கருவை, எப்படி தாயின் சாயலில் மாற்றுகிறததோ, அப்படியே பரிசுத்த ஆவியினயானவரின் வல்லமை, உங்களை தெய்வீக சாயலில் மறுரூபமாக்கும். அல்லேலுயா!

கொலோசெயர் 3:1
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!