இன்றைய வேத வசனம் 05.12.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
மலர்களை விரும்பாதவர் யார்? அழகிய மலர்களை கண்டவுடனே உங்களை அறியாமலேயே உங்கள் முகம் மலர்கிறது. உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது.
காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். என்றார் இயேசு (மத்தேயு 6:28)
"சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை" என்று வேதம் சொல்கிறது. ஆம், கர்த்தரே உங்களை உடுத்துவிக்கிறார்.
மலர்களுக்கு மணம் உண்டு! அந்த மணத்திற்கு ஈர்க்கும் சக்தியுண்டு!
பவுல் அப்போஸ்தலன், "எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று எழுதுகிறார். நாமே கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நற்கந்தமாயிருக்கிறோம். (2 கொரிந்தியர் 2:14,15
மலர்களுக்கு நிறம் உண்டு! அந்த நிறத்திற்கு ஒரு அர்த்தம் உண்டு!
சாரோனின் ரோஜா சிவப்பு நிறமாய் கிறிஸ்துவின் இரத்தத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம் வெண்மையாக இருப்பது போல, இயேசுவின் பரிசுத்தத்தில் நீங்கள் வளர வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறது.
தெய்வீக மலர்களே! உங்களில் தெய்வீக அழகு, தெய்வீக மணம், தெய்வீக நிறம் பரிமளிக்கட்டும்.
உன்னதப்பாட்டு 2:2
முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
ஆமென்..