கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் பிற்போடப்பட்டது

Prabha Praneetha
4 years ago
கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் பிற்போடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் தனிப்பட்ட காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று இந்த வாரம் இந்தியாவிற்கு செல்லவிருந்தனர்.

இதன்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கும் வகையில் இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த நிலையில் இந்த பயணம் இடம்பெறவிருந்தது.

இருப்பினும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த விஜயம் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4