மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

Prabha Praneetha
4 years ago
மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர் கிராமம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை  நீதிமன்ற வீதி, ரெஸ்ட் ஹவுஸ் வீதி, வீட்டுத்திட்டம் குறுந்தயடி, பாலமுனை , அட்டாளைச்சேனை, ஒலுவில் வீட்டுத்திட்டம், ஹிச்ரா பிரதான வீதி அம்பாறை வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

திங்கட்கிழமை ,சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை  அம்பாறை வீதி, வங்கலாவாடி, சென்னல்கிராமம் ஆகிய பகுதிகளிலும் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

18ஆம் திகதி, வைத்தியசாலை வீதி இருந்து தாளவெட்டுவான் ப்ரதர் ஹவுஸ் வீதி, மணல்சேனை, மருதமுனை, துரவந்தியமேடு, பெரியநீலாவனை, பாண்டிருப்பு, சென்னல்கிராமம் மலையடிகிராமம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4