இன்றைய வேத வசனம் 07.12.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
நாம் வாழும் இந்த உலகத்தில், நாம் பரிசுத்தமாக வாழ முடியுமா? என்று பலரும் எண்ணுகிறார்கள்.
இந்த உலகில் எங்கும் பாவம் செய்து விடக் கூடிய சூழ்நிலைகள். நம்மை கறைப்படுத்தும் காரியங்கள்! நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் நாம் பரிசுத்தமாக வாழ முடியுமா? என்ற எண்ணம் பலருடைய மனதில் தோன்றுகிறது.
ஆனால், தேவாதி தேவன் சொல்லுகிறார். உங்களை சிருஷ்டித்த தேவாதி தேவன் சொல்லுகிறார். "நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று" (லேவியராகமம் 20:8)
ஆம் நண்பர்களே, அவரால் உங்களை பரிசுத்தமாக முடியும்!
வேதாகமத்தில், ஏசாயா புத்தகம் 6 -ம் அதிகாரம் 5 முதல் 7 வசனங்களை வாசித்து பாருங்கள். அங்கு ஏசாயா என்ற தேவ பக்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான்.
அவன் உலகத்தை நோக்கி பார்க்கிறான், தேசத்தை ஆளும் ராஜாக்களை நோக்கி பார்க்கிறான். பக்தியுள்வருகளாய் இருந்து தேவனுக்கு பணிசெய்யும் மக்களை பார்க்கிறான். சாதாரண ஜனங்களையும் பார்க்கிறான்!
எல்லாருக்குள்ளும் பாவங்களும், அசுத்தங்களும் நிறைந்து இருக்கிறது! இதைப் பார்த்து அவன் துக்கப்பட்டு, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அசுத்தங்களும், பாவங்களும் இருக்கிறது என்று குற்றப் படுத்திகொண்டு இருந்தான்!
அந்த ஒரு சூழ்நிலையில்தான் தேவனுடைய ஆலயத்தில் அவன் இருக்கும்போது, தேவன் அவனுக்கு தரிசனமாகிறார்.
உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் தேவனின் மகிமையை அவன் காண்கிறான். அவரைத் தேவதூதர்கள் பரிசுத்தர், பரிசுத்தர் என்று போற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தேவ மகிமைக்கு முன்பாக தன்னை நிறுத்தி பார்த்தபின், தன் அசுத்த நிலை அவனுக்கு தெரிந்தது.
ஐய்யோ, மற்றவர்களை பாவிகள் என்று சொல்லிக்கொண்டிருந்த நானே பரிசுத்தமில்லாமல் இருக்கிறேனே. நான் அசுத்த உதடுள்ளவன் என்று புலம்ப ஆரம்பித்தான்!
அவன் மனம் பரிசுத்தத்தை வாஞ்சிக்க ஆரம்பித்தது. அவன் வாழ்க்கையில் பரிசுத்தமில்லாத காரியங்கள் இருப்பதை உணர்ந்தான்!
உடனே ஆண்டவர் தமது தூதனை அனுப்பினார்! தூதன் வந்து ஏசாயாவின் உதடை தொட்டு, ஆண்டவர் அவனை பரிசுத்தமாக்கும்படியான ஒரு காரியத்தை செய்தார்.
நான் உன்னை பரிசுத்தமாக்கினேன், நான் உன் அக்கிரமங்களை நீக்க செய்தேன். என்ற படியான ஒரு அனுபவத்தை தேவன் அவனுக்கு கொடுத்தார்.
ஐயோ! நான் அதமானேன் நான் அசுத்தத்தில் இருக்கிறேன்! என்று சொன்னவனை, தொட்டு பரிசுத்த படுத்தின தேவன் உங்களையும் பரிசுத்தமாக்க வல்லவராயிருக்கிறார்.
லேவியராகமம் 20:8
என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
ஆமென்.