இலங்கை சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #School #Student #Corona Virus
Nila
2 years ago
இலங்கை சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்தத் தவறினால் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
 
கல்வி ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
 
பாடசாலைகளில்இருந்து பல தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், மாணவர்கள் தொடர்பான கோவிட்-கொத்தணிகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
நிலைமையை கட்டுப்படுத்தும் பொறுப்பு கல்வி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உள்ளது.
 
குறிப்பாக பாடசாலையில் படிக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
 
கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
அவ்வாறு செய்யத் தவறினால் தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்குவதுடன் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!