சீன உரக்கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Reha
2 years ago
சீன உரக்கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

சீன உரத்துடனான கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

சீன உர நிறுவனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சீன தூதர், கடிதமொன்றின் ஊடாக தமக்கு அறிவித்துள்ளதாகவும், அத்துடன் இலங்கை உர நிறுவனம், சீன உர நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக இது குறித்த அறிவித்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீள சீனா நோக்கி பயணிக்கவில்லை எனவும், இலங்கை கடல் எல்லைக்குள்ளேயே இருந்துள்ளதாகவும் சர்வதேச கடல்சார் தரவுகள் வழி அறிய முடிகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமக்கு ஏற்பட்ட நட்டத்திற்காக சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம், மத்தியஸ்த சபையின் ஊடாக 8 மில்லியன் டொலர் நட்ட ஈட்டை இலங்கை வரையறுக்கப்பட்ட வணிக உர நிறுவனத்திடமிருந்து கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.            

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!