முல்லைத்தீவில் குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் வெற்றியளிக்குமா?

#SriLanka #Jaffna #Fisherman
 முல்லைத்தீவில் குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் வெற்றியளிக்குமா?

தற்போது நாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் பின்தங்கிய நிலையில் அங்கு அபிவிருத்தி காண எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக குளங்களில் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றைய தினம் (07) தெரிவுசெய்யப்பட்ட ஐந்து குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேறாங்கண்டல்குளம், ஐயன்கன்குளம், ஆலங்குளம், அம்பலப்பெருமாள்குளம்,  தென்னியன்குளம், கோட்டை கட்டியகுளம் ஆகிய குளங்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் மீன் குஞ்சுகளை விடுகின்ற செயல்திட்டத்தை உலக உணவுத்திட்டம் முன்னெடுத்துள்ளது.
 
இதன் முதல் கட்டமாக இன்றைய தினம் அம்பலப்பெருமாள் குளத்தில் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரானுடைய தலைமையில் இடம்பெற்ற குறித்த திட்டத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்  ஆரம்பித்து வைத்தார்.
 
KOICA   நிறுவனத்தின் நிதி அனுசரனையில் உலக உணவுத் திட்டம் மற்றும் NAQDA  நிறுவனம்  இணைந்து இந்த செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இத்திட்டத்தினூடாக கடந்த வருடமும் சுமார் எட்டு லட்சம் மீன் குஞ்சுகள் விட்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இந் நடைமுறை தொடரப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!