பணம் மோசடி: வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது

#Arrest
Prathees
2 years ago
பணம் மோசடி: வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய வேலை அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்தநிறுவனத்தின் உரிமையாளர் தனது தொழிலாளர் உரிமத்தை மற்றொரு வெளிநாட்டவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி மூலம் மாற்றியுள்ளார்.

வெளிநாட்டவர் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞர்களிடம் இருந்து 60 லட்சம் ருபாய்க்கும்  மேல  சந்தேக நபரால்  பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணம் செலுத்தியவர்கள்  வெளிநாட்டுக்கு அனுப்பப்படாததால் இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபருக்கு எதிராக இதுவரை 41 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!