மாரவில ஒமிக்ரோன் பெண்ணுக்கு தடுப்பூசி போடப்படாமைக்கு காரணம் இதுவா?

#Omicron
Prathees
2 years ago
மாரவில ஒமிக்ரோன் பெண்ணுக்கு தடுப்பூசி போடப்படாமைக்கு காரணம் இதுவா?

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட மாரவில பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை காரணமாக கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை என தெரியவந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர்இ பெண்ணின் பெற்றோர்இ அவரது உடன்பிறந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு மத நம்பிக்கையின்படி தடுப்பூசி போடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக உபுல் ரோஹன தெரிவித்தார்.

வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளைஇ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்த பெண்ணும் அவரது கணவரும் தடுப்பூசி போடாமல் நைஜீரியாவுக்கு வெளிநாடு சென்றது எப்படி? இது இன்னும் மர்மமாகவே இருப்பதாகவும்இ இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று (7) தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் விசாரிக்க உள்ளதாகவும்இ வாக்குமூலம் பெறப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!