இன்றைய வேத வசனம் 09.12.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு .. ..ஐயோ" (ஆமோஸ் 6:1)
இன்று அனேக சபைகளைப் பிடித்திருக்கும் பயங்கர நோய் நிர்விசாரமாகும். நிர்விசாரம் என்றால் என்ன? செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல், செய்யத் தகாதவைகளையே செய்து கொண்டிருப்பதே நிர்விசாரம்.
குளத்தில் ஒருவன் விழுந்து, உயிருக்காக போராடி அழிந்து கொண்டிருக்கும் போது, நீச்சல் தெரிந்த ஒருவன் அப்படியே உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது நிர்விசாரம்!
தன் நோயாளி துடித்து துடித்து மரித்துக் கொண்டிருக்கும் போது, டாக்டர் உல்லாசமாய் பேசிக்கொண்டிருப்பது நிர்விசாரம்!
வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, உடனே உதவி செய்து அணைக்க தீவிரிக்காமல் அமர்ந்திருப்பது நிர்விசாரம்!
நம் கண்முன் ஆத்துமாக்கள் அழிவை நோக்கி வேகமாய் செல்வதை அறிந்தும், ஆத்தும பாரமில்லாமல் சுகமாய் ஜீவிப்பது, உலக ஆசீர்வாத செய்திகளை கேட்பது எவ்வளவு நிர்விசாரம்!
கல்கத்தா தெரு ஓரங்களில், அனாதைகளாய் கிடந்த குழந்தைகள், குஷ்டரோகிகள், வயது முதிர்ந்த போக்கிடமில்லாமல் தவிப்போரைக் கண்டு, அன்னை தெரசாவால் நிர்விசாரமாய் இருக்க முடியவில்லை!
அவர்கள் ஊழியத்தை ஆரம்பிக்கும்போது 30 பைசா மட்டுமே அவர்களிடம் இருந்தது. இந்த முப்பது பைசாகளோடும், என் தேவனாகிய கர்த்தரின் பெலத்தோடும் நான் பெரிய காரியங்களை செய்து காண்பேன் என்று சொன்னார்கள். அப்படியே செய்தார்கள்!
லூக்கா 9:26
என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.