இரத்தினக் க‌ற்களை வாங்குபவர்களுக்கு அடிக்கும் அதிஸ்டம். 

#SriLanka
Prathees
2 years ago
இரத்தினக் க‌ற்களை வாங்குபவர்களுக்கு அடிக்கும் அதிஸ்டம். 

ஒன்லைனூடாக அமெரிகா டொலர்  3,000 வரை ரத்தினங்களை வாங்க  அனுமதி வழங்கப்படுகிறது.

3,000 அமெரிக்க டாலர்கள் வரையிலான இரத்தினக்கல் ஓர்டர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல், தொழில்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் அறவிடப்படும் 0.5 வீத கட்டணத்தை 0.25 வீதமாகக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் கோவிட் சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை மீதான கட்டுப்பாடுகள் காரணமாக ரத்தினம் மற்றும் ஆபரணத் தொழிலை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை சட்டத்தின் கீழ் கைத்தொழில் அமைச்சரினால் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2165/2 இவ்வாறு குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் பற்றிக், கைத்தறி ஜவுளி மற்றும் உள்ளுர் ஆடைகள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.

இரத்தினபுரி, 'வீ கங்கை'க்கு அருகில் இரத்தினக்கல் அகழ்வுத் திட்டத்தை ஆரம்பிக்கும் திட்டம் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

இதற்கிணங்க, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், நாட்டுக்கும் பாரியளவு வருமானத்தை ஈட்டித் தரும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எலஹெர பிரதேசத்தில் மாணிக்கக்கல் அனுமதி வழங்கும் முறைமையை ஏற்படுத்துவதன் மூலம் பொது மக்கள் மாணிக்கக்கல் அகழ்வு தொழிலில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!