கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போடாவிட்டால் சட்ட நடவடிக்கை!

#Corona Virus #Covid Vaccine
Mayoorikka
2 years ago
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போடாவிட்டால் சட்ட நடவடிக்கை!

நாட்டு மக்கள் கோவிட்-19 தடுப்பூசியின்இரண்டு டோஸ்களை பெறுவதை கட்டாயமாக்கும் வகையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம் புக்வெல தெரிவித்துள்ளார்.

தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர்குறிப்பிட்டார்.
கண்டியில் செய்தியாளர்களை சந்தித்த போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
மேற்கண்டவாறு கூறினார். மேலும், தொற்று வீதத்தை குறைக்க உதவும் தடுப்பூசிகள் தொடர்பான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் நபர்களுக்கு எல்லை கடத்தல் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது மற்றும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் அவதானித்து வருகின்றோம்.

சுற்றுலாத்துறை, விமான நிலையம், விமானப் போக்குவரத்து மற்றும் அது தொடர்பான தொழில்துறைகளைச்
சேர்ந்தவர்களை நாளை சந்தித்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை வகுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை வருடங்களில் முழுநாட்டு மக்களும் தியாகங்களைச் செய்திருப்பதால், கோவிட்-19 வைரஸை ஒழிப்பதற்கு பொதுவான வேலைத்திட்டம் பின்பற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. 

தடுப்பூசியின் டோஸ் எதுவும் பெறாத ஒரு நபரின் வருகை குறித்தும், கோவிட்-19 வைரஸின் ஒமைக்ரோன்
திரிபு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாடசாலைகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பாடசாலைகளில் வகுப்புகளை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால் மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்  என்றார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!