அம்பாறையில் ஆண்களை ஆபாச வலையில் சிக்க வைத்து பணம் பறிக்கும் பெண் கும்பல்.....

#SriLanka #Ampara
அம்பாறையில் ஆண்களை ஆபாச வலையில் சிக்க வைத்து பணம் பறிக்கும் பெண் கும்பல்.....

ஒரு நாள் ஒரு ஆண் நபர் எனக்கு கைப்பேசியில் கதைத்து நான் அவர் மனைவியை கெடுத்துவிட்டதாகவும், அதற்கு தான் பொலிஸில் புகார் செய்யவிருப்பதாகவும் கூ

ஒரு கட்டத்தில் எனக்கு மாரடைப்பு வந்துவிடுமோ என்று அச்சப்பட்டேன். பொலிஸுக்குப் போக வேண்டாம் என்றும், எது வேண்டுமானாலும் நான் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவரிடம் கூறினேன். அவர் ஜப்பான் செல்லவுள்ளதாகவும் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் கூறி, அந்தப் பணத்தை என்னிடம் கேட்டார். தருகிறேன் என்றேன்.

ஆனாலும், அவ்வளவு தொகைப் பணம் என்னிடம் இருக்கவில்லை. பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. அக்கரைப்பற்றிலுள்ள எனது நண்பர் ஒருவரைச் சந்தித்து நடந்தவை அனைத்தையும் கூறினேன். அவர் என்னை நட்புடன் திட்டினார்.

பிறகு அரசியல் அதிகாரத்திலுள்ள ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்று விடயத்தைச் சொன்னார். அந்த அரசியல்வாதி என்னை கடந்த 28ஆம் திகதி அக்கரைப்பற்று காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் சென்றார். நடந்தவை அனைத்தையும் அங்கு கூறினேன். சம்பந்தப்பட்ட நபர்களை பிடிப்பதற்கான திட்டம் அங்கு தீட்டப்பட்டது” என்றார் பாதிக்கப்பட்ட அந்த நபர்.

மொத்தமாக ஆறு லட்சம் ரூபாயை இழந்த நிலையில்தான், மேற்படி நபரிடம் மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் சிக்கியது எப்படி?

கடந்த மாதம் 29ஆம் திகதி, குறித்த நபரின் முறைப்பாடு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்டது. அன்று இரவு 7.00 மணிக்கு தாங்கள் கேட்ட பணத்தை ஒலுவில் – கட்டார் சிற்றியிலுள்ள ஓர் இடத்தில் வைக்குமாறு சந்தேக நபர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். அதுபோலவே செய்வதென பொலிஸார் முடிவு செய்தனர்.

ஆனால், பணத்துக்குப் பதிலாக கடுதாசிப் பொதியொன்றை வைப்பதென தீர்மானிக்கப்பட்டது. அன்று இரவு 7.00 மணியளவில் – தான் கொண்டு வந்த ‘பொட்டலத்தை’ குறித்த இடத்தில் பாதிக்கப்பட்ட நபர் வைத்தார். அதற்கு முன்பதாகவே அந்த இடத்துக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஐவர் – சிவில் உடையில் வந்து, மறைவில் காத்திருந்தனர். பணம் வைக்கச் சொன்ன நபரை பாதிக்கப்பட்ட நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

உரிய இடத்தில் பணத்தை வைத்து விட்டதாகக் கூறினார். உடனே அவரை அந்த இடத்திலிருந்து கிளம்புமாறும், 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நிந்தவூர் பிரதேசத்துக்குச் சென்று, அங்கு நிற்பதை உறுதிப்படுத்தும் வகையில் கைபேசி மூலம் ‘லொகேசன் ஷேர்’ செய்யும் படியும் பாதிக்கப்பட்ட நபரிடம் – பணம் பறிக்கும் கும்பல் கூறியுள்ளது. அவரும் அவ்வாறே செய்துள்ளார்.

பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை பொலிஸார் விவரித்தனர்.“நாம் இருளில் மறைந்திருந்தோம். இரவு 7.30 மணியிருக்கும். பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கடந்து, முன்னாலுள்ள வீதியில் மோட்டார் பைக் ஒன்று சென்றது. சற்று தூரம் சென்ற அந்த பைக் திரும்பி, பணம் வைக்கப்பட்ட வளவுக்கு முன்னால் வந்து நின்றது. அந்த பைக்கின் – பின் இருக்கையில் அமர்ந்து வந்த நபர் இறங்கிச் சென்று, ‘போலிப் பணப் பொதி’யை எடுத்தார்.

நாங்கள் உடனடியாக அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தோம். அவர் ஒரு பெண். பைக் ஓட்டி வந்தவர் ஆண். அவரையும் கைது செய்தோம்” என்றனர். கைது செய்யப்பட்டவர் தன்னுடன் இரண்டாவதாகப் பேசிய பெண் குரலுக்குரியவரே என, பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் கிடைத்த சில குரல் பதிவுகளை செய்தியாளர் கேட்டார். அவற்றில் ஒன்றுக்கும் மேலான பெண்களின் குரல்கள் இருப்பதாக உணர முடிகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து பொலிஸார் கைப்பற்றிய கைப்பேசியில் பல ஆண்களின் நிர்வாணப் படங்கள் இருந்துள்ளன. அவற்றில் மிக உயர்ந்த அரச பதவிகளை வகிக்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சில நபர்களின் படங்களும், அரசியல்வாதி மற்றும் சமயத் தலைவர் உள்ளிட்டவர்களின் படங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களும் மேற்படி சந்தேக நபர்களிடம் பணத்தை இழந்துள்ளனரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்தக் கும்பலிடம் பணத்தை வேறு யாராவது இழந்திருந்தால், அவர்களும் முறையிடலாம் எனவும் பொலிஸ் தரப்பு கூறுகிறது. இந்தப் பின்னணியில்,  01ஆம் தேதி இரவு, அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர், சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தையும் ஆறு பவுண் நகையினையும் மேற்படி பெண்ணிடம் இழந்ததாகக் கூறி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

இதன் படி மேற்படி குமபல் சுமார் 8 ஆண்டுகளாக ஆண்களை இவ்வாறு ஆபாச மோசம் பண்ணி ஏமாற்றி பணம் கொள்ளையடித்து வருவதாக தெரியவருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!