இன்றைய வேத வசனம் 10.12.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 10.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

சில நேரங்களில் உங்களுக்கு ஜெபிப்பதற்கு நேரமே கிடைக்காமல், மிக அதிகமான வேலைகளில் மூழ்கிப் போய் விடுகிறீர்கள்! ஆனால் மிக முக்கியமான வேலைகளை விட அதிக முக்கியமான வேலை ஜெபம் செய்வது!

நீங்கள் ஜெபம் பண்ண உங்கள் இருதயத்தைச் செலுத்தும்போது, கர்த்தர் மற்ற எல்லா வேலைகளையும் உங்களுக்குத் சுலபமாக்கித் தருவார்!

ஒருவர் தூரத்தில் உள்ள ஒரு அதிகாரியை பார்க்க அதிகாலையிலேயே புறப்பட்டார். ஆனால் ஆவியானவரோ, அவரை ஜெபிக்கும்படி ஏவிக் கொண்டே இருந்தார்.

அதற்கு கீழ்படிந்த அந்த பக்தன் நீண்ட நேரம் ஜெபித்து விட்டு எழும்பும்போது, அந்த அதிகாரியே தன்னைப் பார்க்கும்படி தன் வீட்டிற்கு வந்திருப்பதை கண்டார். முடிக்க வேண்டிய பொறுப்புகளை மிகச் சுலபமாக முடித்து விட்டார்.

மார்ட்டின் லூதர் சொன்னார், எனக்கு இன்று மிகவும் அதிகமான வேலைகள் இருக்கிறது. ஆகவே மிகவும் அதிகமான நேரம் நான் ஜெபிக்க வேண்டும். மூன்று மணி நேரமாவது நான் அமர்ந்து ஜெபித்தால் தான், அத்தனை கடமைகளையும் என்னால் நிறைவேற்ற முடியும் என்று.

எட்வர்ட் பைசன் என்ற விசுவாசி சொன்னார், என் கல்லூரி நாட்களில் அதிகமாக படிக்க வேண்டிய நேரங்களிலும், பரிட்சை சந்தர்ப்பங்களிலும் கூட, என் ஜெபத்தை நான் விட்டுவிடவில்லை, அதற்காக கர்த்தர் எனக்கு விஷயத்தை ஞாபக சக்தியையும், அறிவையும் தந்தார் என்பதாக.

அருமையான தேவ ஜனமே மறந்துவிடாதீர்கள்!! "ஜெபமே ஜெயம்" , அல்லேலூயா.

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
ஆமென்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!